நேற்று ரம்மியமான  ஒரு மாலைப்பொழுதில் எம்மை காணவந்த தம்பிகளோடு அளவளாவிக்  கொண்டிருந்தபொழுது நடந்த உரையாடலில் ,

#நாம்யார்#

## என்பவர் யார்

அவர்கென்று என்ன குணம் உள்ளது அவருடைய பழக்க வழக்கங்கள் என்ன  என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதற்குக் காரணம் தற்பொழுது தமிழை மையமாக வைத்து நடத்தஅரசியல்வாதிகள்  தமிழரை கையாளும் விதமும் வேதனைக்குரியதாக  இருப்பதால். தென்னிந்திய மக்களை குழப்பமடைய செய்து மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் சாதியின் பெயரால் பெரும் ச வழிபாடு கோட்பாடுகளில் பெயரால் தென்புலத்தாரை அதாவது தென்னகத்தை சேர்ந்த மக்களை அதாவது தென்னிந்திய  மக்களை மீண்டும் சொல்கிறேன் மொழியின் பெயரால் (தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு மொழி) பேசும் இந்த தென்னிந்திய மக்களின் ஒற்றுமையை சீர் சீர்குலைத்தால்  தென்னிந்தியப் பகுதிகளில் தங்களது வலிமையான நிலைப்பாட்டால் தமிழர்கள் தம் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி மிகப்பெரும் சுரண்டல்கள் செய்யலாம் என்று ஆயத்தமாகி வருகிறது ஒரு கும்பல் அதற்கான ஒரு சிறு முயற்சியே எம் இந்த நீள் பதிவு.

#யார்தமிழர்#?

#தமிழர்யார்# ?

இங்கனம் ஒரு கேள்வி எல்லாருடைய மனதையும் எல்லோருடைய மனதிலும் ஐயம்  இருந்து கொண்டே இருக்கிறது. அதுவும் சமீப காலங்களில் தமிழர்களை மொழியால் இனத்தால் பிறப்பால் பிரிக்கப்படும் சூழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது.  தமிழில் இருந்து பிறந்தது சுந்தர தெலுங்கும், கவின் மலையாளமும் கன்னடமும் தமிழர்தம் உதிரத்தில்  இருந்து எழுந்ததே என்று(முழு) தமிழ் தாய் வாழ்த்து  குறிப்பிட்டுள்ளது உண்மையே.

தமிழ் அறிஞர்கள்  #பாரதிதாசன்#

#மொழிஞாயிறுதேவநேயப் பாவாணர்#

#மாபோசி#

இவர்கள் அத்தனை பேரும் தென்னிந்திய மொழிகளில் தமிழே மூத்த மொழி என்றும் வாதிட்டனர் ஆனால் என்றும் பிறமொழிகளை சாடியதில்லை.

தமிழ்மொழியின் மேல் தெலுங்கும் மலையாளமும் கன்னடத்தின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் தமிழ்மொழி மட்டுமே தென்னிந்திய மொழிகள் அனைத்திற்கும் மூல ஆதி மொழி என்று கூறினார்கள்.

தென்னிந்திய மக்கள் மொழியால் பிரிக்கப்படுவது வேதனைக்குரியது.

#திருவிடம்# (#திராவிடம்#)

தென்னிந்திய மொழிசார்ந்த பிராந்தியம் மற்றும் அதன் அரசர்கள் சேரர்கள்(மலையாளம்) மேலைசாளுக்கியம்(கன்னடம் )  கீழை சாளுக்கியம் (தெலுங்கு) பல அரசுகளை நிறுவியவர்கள் .

இந்த தென்னிந்திய  பகுதியே #திராவிடநாடு என்று அழைக்கப்படுகிறது  ஆதியில் வட்டாரமொழியாக  இருந்த மொழிகள் காலத்தின் மாறுபாட்டால் இலக்கியங்களில் தனிதன்மை பெற்று கிளை மொழிகளாக பிரிந்து இருக்கிறார்கள். வட இந்தியாவில் எங்கணம்  பஞ்சாபி குஜராத்தி வங்காளம் என கிளை மொழிகள் உள்ளன அதேபோல்  இந்த திராவிட நாடு எனப்படும் பகுதியில் தமிழ் மொழி தெலுங்கு மொழி கன்னடம் எழுத்து மொழி இல்லாத துளுவமும் கொங்கணி பேச்சு மொழியாக வழக்கில் இருந்துள்ளது .

தமிழர் என்பது மொழிப்பெயர் திராவிடர் என்பது பிராந்தியபெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்று தலைப்பில்கூட முடியும். அதேபோல்  தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர்  குழுமமாக இருக்கமுடியும் ஆனால் இனத்தால் தமழிரான ஒருவன் எந்தச் சமயத்தை சார்ந்தவனாயிருந்தாலும், எந்த #பெரும்தெய்வகோட்பாடு#
(மார்க்கம்)  உடையவர்கள் இருந்தலும்  அவன் தமிழனே.

இனக்குழுக்களாக உருவாகி இன்று சாதியாக மாறி இருந்தாலும் அவரும் தமிழர்.  எங்ஙனம் ஒரு சொல் திருவிடம்(திராவிடம்) உருவானது அல்லது உருவாக்கபட்டது என அறிந்துகொள்வோம்.

#திராவிடநாடு# எது ?

1956க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நாம் ‘திராவிட நாடு ‘ என்று சொல்லலாம். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விட்ட பிறகும் கூட தனித்தனி சமஸ்தானங்களாக இருந்த பகுதிகளை ஒன்றிணைந்து உருவாக்கபட்ட ஒருங்கிணைந்த இந்தியாவில் வடகத்திய சூழ்ச்சிகாரர்களால் நாம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கபட்டு தூண்டாடபட்டோம். அன்று தொடங்கியது இந்த வேற்றுமை உணர்வு.

அங்கனம் எனில் மீண்டும் கேள்வி தமிழர் யார் இதோ மீண்டும் ஆராய்வோம்.

தமிழ் தெரியுமோ தெரியாதோ, அவர்களின் பெற்றோர்கள் எந்த மொழியை பேசும் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் முக்கியம்(என்கிறார்கள் இன்று மொழிசார்ந்து இனம் பேசுபவர்கள்)

பெற்றோரின் பூர்வீக மொழி மட்டும் தான் அடையாளம் என்றால், என் தாய் தமிழச்சி இல்லை, வேற்று மொழிகாரி என்றால், நான் தமிழர் இல்லையா?
இல்லை, உன் தந்தை தமிழராக இருந்தால் போதும், யாராவது ஒரு பெற்றோர் தமிழராக இருந்தாலே தமிழர் என்ற அந்தஸ்த்தை பெறலாம், என்றாலோ, அடுத்து வரும் கேள்வி, “அப்படியானால்

தமிழ் என்பது மொழியின் அடையாளமா?  இனத்தில் அடையாளமா?”

தமிழ் எனும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு பேசலாம், காந்திகூடத்தான் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த போது தமிழை கற்றுக்கொண்டார், அதற்காக அவர் தமிழராகிவிட முடியுமா? அதெல்லாம் இல்லை, தமிழ் என்பது ஒரு இனம்.

சரி, இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறுபாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே…..அதனால் தான் தமிழர், தெலுங்கர், மலையாளி, துலு, கன்னடக்காரர், என்ற மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி, அனைத்து திடராவிடமொழி(பிராந்தியம்)பேசுபவர்களும் ஒரே கூட்டம் தான். காரணம் இவரக்ள் எல்லோருமே ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி, ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் தான்.

தமிழர்களின் தோற்றத்தைப்(பிறப்பிடம்) பற்றி மூன்று கோட்பாடுகள் பேசப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன அவை யாவை எனில் அது இன்றைய

1.தமிழ் நாட்டில் ஆதிகுடி அவன்தான் தமிழ்நாட்டின் மூதாய் வழி வழி வந்தவன் தமிழர்.

2.அடுத்த கோட்பாடு தமிழன் தோன்றியது லெமுரியா என்று அழைக்கப்பட்ட குமரிக்கண்டம் நிலப்பரப்பில் இது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்ததாக நிரூபிக்கப்படாத வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

3.தென்குமரிகண்டம் கடல்கோளால் அழிந்த விட்டதாகவும் கூறபடும்  அங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்றைய அதாவது தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா பகுதிகளில் குடியேரியதாக கூறபடுகிறது.

எங்கனம் இது சாத்தியம்?

சற்று ஆராய்ந்து பார்த்தால் இலக்கியம் கல்வெட்டு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி என பல சான்றுகளை நம்மால் எடுத்துக்காட்ட முடியும் இறுதியாக தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கும் கிழடி ஆய்வுகள் மூலமாகவும் ஆதிகுடி தமிழரே என்று உறுதியாக கூறமுடியும்  இங்கனம் வரலாற்று வரலாற்றுச் சான்றுகள் ஏராளம் .

தமிழ்நாட்டின் தொல்குடி தமிழர்தான் என்பதற்கு என்னென்ன ஆதாரங்கள் உள்ளன அவை தமிழர்களை எங்கணும் பின்னோக்கி  ஆதாரமாக எடுத்துக் சென்று கொண்டிருக்கின்றன என்பதை முதலில் காண்போம்.

1.அதில் முதலில் வருவது கல்வெட்டு ஆராய்ச்சிகள்.

2.புதைபொருள் அகழ்வாராய்ச்சிகள்  இலக்கிய ஆதாரங்கள் .
3.அடுத்து வருவது ஆதாரங்கள் வடமொழி(சமஸ்கிருதம்) இலக்கியங்கள் வரும் தமிழ் சொற்கள்  ஆதாரங்கள் .
இங்கனம் தமிழர் தொல் குடிமக்களே என்றும் தமிழில் இருந்தே தென்னிந்திய பிராந்திய திராவிட மொழிகள் தோன்றின எனவும் உறுதியாகிறது.
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் பரப்பு அவர்களுடையதே குமரிக்கண்டமும் அவர்கள் வாழ்ந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது ஆக இது ஒன்றுபட்ட நிலப்பரப்பு என்றும் மிகப்பெரிய ஒரு சுனாமி அலைகளால்  கடலடியில் பெரும் நிலப்பரப்பு போயிருந்தாலும் கூட தமிழன் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பே அவனது தொல்குடி நிலப்பரப்பு என்று ஊர்ஜிதமாகிறது .தமிழர்கள் முதல் சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் படைத்தார்கள் என்ற வரலாறும் கூட உண்டு தலைச் சங்கம் இடைச் சங்கம் கடைச் சங்கம் என மூவகைப் பட்ட இச்சங்கம் பாண்டியர்கள் தலைமைவகித்து காத்தார்கள் என்றும் அகத்திய புலவர் தலைமையேற்று இருந்தார் என்றும் வரலாறுகள் உண்டு.
ஆகவே மொழியால் இனத்தால் உணர்வாள் இன்ன பிற தகுதிகளால் எவரொருவர் தம்மை தமிழோடு இணைத்துக் கொள்கிறார்கள் அவர்களை தன்பால் ஈர்த்துக் கொள்கிறது தமிழில்.
தமிழரின் பண்பும் அதுவே தமிழர் தாயுமானவன் அவன் தந்தையானவன் அவன் எல்லாம் எல்லாமுமாய் ஆதிகுடி அவனே மூலமொழியை தந்தவனும் தமிழனே க ஆதலால் தமிழில் இருந்து பிறந்த தென்னிந்திய பிராந்திய மொழிகளை அதற்கான மரியாதையோடு காப்போம். அதே சமயத்தில் தமிழுக்கும் இருக்கும் உள்ள தனித்தன்மையை யாரேனும் ஆராய முற்பட்டாள் அதற்கான பதிலடியை கொடுப்போம் தமிழ் மொழி மட்டுமே உலக கணனி மயமாக்கலில் வைத்து ஓங்கி நிற்கிறது இந்திய மொழிகளில் கணனி மயமாக்கலில் தமிழ் தழைத்தோங்கி இருக்கிறது ஆம் சற்று சிந்தித்துப் பாருங்கள் தமிழும் தமிழரின் பெருமையையும்  மூத்த தமிழ் குடியாய் ஒட்டு மொத்த உலகிற்கும் பெருமை சேர்ப்போம் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் வேற்றுமையில் ஒற்றுமை கண்டவன்  தமிழன்

#தனித்தமிழ்# கண்டது #தமிழர்இனம்#.

தமிழர் என்ற இனம் உண்டு தனியே அவர்க்கு குணமுண்டு அந்த குணமும் பண்பே உருவானது.

அன்பே சிறந்தது என்று என்னுடைய உரையை முடிக்கிறேன் நன்றி

#தமிழ்வணக்கம்#

#வாழ்த்துக்கள்#.

#பேரன்புடன்#

முனைவர் அர.க
#விக்ரமகர்ணபழுவேட்டரையர்#