#குலதெய்வம்# #வழிபாட்டுமுறை# #தென்னிந்தியவழிபாட்டுமுறை#
#பழுவேட்டரையர்#

பெருங்குடி தென்னிந்திய( தமிழில் இருந்து பிறந்த அனைத்தும் தமிழ் மொழியே) தமிழ் மக்களே
மறவாதிரு
உமது குலதெய்வ வழிபாட்டு முறையை…

குலதெய்வம் என்பது தென்னிந்திய மக்களின்( ஒருமித்த தமிழர்கள்) வழிபாட்டு முறை ஆனால் கடந்த 600 ஆண்டுகளாக வழிபடும் முறை எப்படி எல்லாம் திரிபு செய்பட்டு பெரியதெய்வ கோட்பாடுகள் கொண்டுவரபட்டு  அதன் முலம் சிதைக்கபட்டு
நீசும்பசூதனி வடபத்ரகாளியாகவும்😔
செல்லியம்மன் ஒடிஷா காளியாகவும்😔
முருகர்(அழகிய மன்னன்)சுப்பிரமணிய சுவாமியாகவும் மாற்றப்பட்ட கொடுமை நடந்தது.

மதுரை வீரன், கருப்பன் ஐயனார், காட்டுகருப்பு  என்று நமது பாட்டன் முப்பாட்டவழிமுறை பின்பு வழிமொழிந்து போக நிற்பந்திக்கபட்டது.  குல தெய்வங்களை  நடுகல்(போரில் வீரமரணம்) தெய்வ வழிபாட்டு முறையில் இருந்து வந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குலதெய்வ வழிபாடு என்பது பல தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களாகவும் தங்களின் குல மக்களுக்களின்  நன்மைக்காக  உயிர்தியாகம் செய்தவர்களாகவும் இருப்பதுண்டு.அந்த குலத்தினரால் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவே குல தெய்வ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
குல தெய்வ வழிபாடு என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையுடனும் பின்னி பிணைந்துள்ளது.நீர் வளம் தரும் ஐய்யனாரையும் நோயில் இருந்து காக்க மாரியம்மனையும் குல தெய்வமாக கருதும் வழக்கம் பின்னணியில் ஏற்பட்டது.
சமுதாயத்தில் நடக்கும் தவறுகளுக்கு நீதி கேட்கும் வகையில் ஆங்காங்கு குலதெய்வ வழிபாடு முதலில் நடந்தது. தவறு செய்பவர்கள் குலதெய்வங்களுக்கு பயந்து ஒழுக்கமாக வாழ்ந்தனர்.

தங்கள் குறைகளை தீர்க்குமாறு குல தெய்வங்களை வேண்டிக் கொள்பவர்கள், அக்குறை தீர்ந்ததும் பொங்கலிடுதல், பலியிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தவறாமல் செய்வதுண்டு.குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது.

கிராமங்களில் இன்றும் குல தெய்வ வழிபாடுகளில் ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
குல தெய்வ வழிபாட்டில் கன்னிமார் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும்.இதில் பொன்னர் சங்கர் வழிபாடு இன்றும் நடைமுறையில் உள்ளது.
குல தெய்வ வழிபாடுகளில் ஆகாச பூஜை என்பது தனிச் சிறப்புடையது. ஆட்டின் ரத்தத்தை சோற்றுடன் கலந்து ஊர் எல்லைக்கு கொண்டு சென்று ஆகாசத்தை நோக்கி எறிவார்கள். அந்த பிரசாதத்தை சிறு தெய்வங்கள் பெற்றுக் கொள்வதாக நம்பப்படுகிறது.
சில சமுதாய மக்கள், தங்கள் குடும்பம் அல்லது ஊர் தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பு, பூக்கட்டிப் போட்டு பார்த்தல் மூலம் முடிவு எடுப்பது வழக்கம்.

குல தெய்வத்துக்கு குறை வைத்தால் வம்ச விருத்தி ஏற்படாது என்று நம்பபட்டதால் மக்களும் ஒழுக்கத்துடன் வாழ்ந்தனர்.
குலதெய்வ வழிபாட்டு முறையில் பரிகார வழிபாடு இல்லாத காரணத்தால் மக்கள் தத்தம் கடமைகளை செவ்வனே செய்து ஊர்கூடி வாழ்ந்தார்கள்ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு குடும்பத்தினர் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், தங்கள் குல தெய்வத்திடம் சென்று வழிபாடு செய்து, ஒருவர் கையால், மற்றவர் திருநீறு வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என் பது பல ஊர்களில் நடை முறையில் உள்ளது.

சற்றே சிந்திக்கவும் ஏன் ஏன் மக்கள் குலதெய்வ வழிபாட்டு முறையில் நகர்ந்து பெரும்தெய்வ வழிபாடு முறைகளுக்கு ஈர்க்பட்டு தங்கள் தனித்தன்மை இழக்கநிர்பந்திக்கபடுகிறார்கள் காரணம் தென்னிந்திய மக்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் செய்து அவர்கள் தங்களுக்குள் பொறாமை விரோதம் வளர்த்து கொண்டு பகைமை கொண்டு பிரிந்து நின்றால் தாங்கள் நினைத்து தை சாதிக்க இங்கே ஒரு நயவஞ்சக கூட்டம் நமக்கு அருகிலேயே
உண்டு
உடுத்தி
உறங்கவும் செய்து வாழ்கிறது
உப்பிட்டவனுக்கே இழிவகை செய்யும் இந்த நிலைகெட்ட மாந்தர்களை அடையாளம் கண்டு நமது மூதாதையர்கள் மறவாதிருங்கள்.
நவீன மாற்றங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது குல தெய்வ வழிபாடுகளின் பூஜைகள், நேர்த்திக் கடன்கள், திரு விழாக்களிலும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் குல தெய்வம் மீதான பயமும், பக்தியுணர்வும் கொஞ்சமும் குறையவில்லை.
குல தெய்வ வழிபாடே தமிழர்களின்(ஒட்டுமொத்த தென்னிந்திய கலாச்சாரம்) வாழ்க்கை பண்பாட்டை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தது. தற்போதும் இருக்கிறது. இனியும் இருக்கும்.

தாயே நீசும்பசூதனி போற்றி
வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல் வெற்றிவேல்் வீரவேல்

என்றும் பேரன்புடன்
முனைவர் அர .க. #விக்கிரமகர்ணபழுவேட்டரையர்#