#காவேரிநமதே# #cauverynamathe# #pazhuvettarayar# 👍👍 #cholargal#

அன்புள்ளம் கொண்ட முகநூல் நன்பர்களே பொறுமையாக படிக்கவும். 🙏

பொன்னிவளநாடே ஆம் எங்கள் இன்றைய பிரிக்கபட்ட தமிழ்நாடே 🙏
உலகிற்கு நாற்றுநட கற்றுகொடுத்தவன் இன்று ஒரு பிடி சோற்றுக்கு ஏந்துகிறான் சொந்த பங்காளிகள் ஆன கர்நாடக எனும் பிரிக்கபட்ட ஒருகினைந்த தமிழகத்திடம்.
எங்கே கொடுத்தோம்,தொலைத்தோம் நம் உரிமைகளை.
இந்திய அரசியலமைப்பும் உதவ மறுக்கிறது
இன்றைய அரசியல்வாதிகளும் மறுக்கிறார்கள்.
ஒரு சிறு கட்டுரையில் பொன்னி தாய்(காவேரி) தெரிந்துகொள்ளலாம்.

கர்நாடக மாநிலத்தில் குடகு உள்ள தலைகாவேரியில் உற்பத்தியாகும் காவேரி ஹாசன், மைசூர், பெங்களூர், சாம்ரஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக 320 கிலோ மீட்டர்வரை பயணப்படும் காவிரி, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை என இத்தனை மாவட்டங்களில் சுமார் 416 கிலோ மீட்டர் பாய்ந்து, பூம்புகாரில் கடலில் சங்கமிக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் காவிரி நதி 64 கிலோ மீட்டர் ஓடுகிறது. இப்படி நீண்டு ஓடும் காவிரியின் மொத்த தூரம் 800 கிலோ மீட்டர் ஆகும். இதன் மொத்த தூரத்தில் தமிழகத்தின் பங்கே அதிகமானது என்பதைவிட, காவிரி பிறப்பெடுக்கும் குடகுப் பகுதி தமிழகத்திற்கு உண்டானது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஆனால் அதுதான் வரலாற்று உண்மை.

இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் தனிமாநிலமாக துளு மொழியின் அடிப்படையில் ‘குடகு’ என்கிற மாநிலம் உருவானது. பின்னர் 1957இல் குடகு மக்கள் தங்களை யூனியன் பகுதியாக இந்தியா இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நேரு, யூனியனாக உங்களை இணைக்க முடியாது, வேண்டுமெனில் ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.

நேருவின் ஆலோசனைப்படி குடகு மக்கள், தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர். ஆனால் தமிழக அரசியலாளர்கள், அதனை நிராகரித்துவிட்டார்கள். அப்போது தந்தை பெரியார் ஒருவர்தான், குடகை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென உரிமைக் குரல் கொடுத்தார். விடுதலைப் பத்திரிகையில் எழுதினார். பேரணி நடத்தினார். இருந்தும் அவரின் குரலை அலட்சியம் செய்ததின் விளைவைத்தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

தமிழகம் குடகை நிராகரித்தைப் போன்றே, கர்நாடகமும் முதலில் நிராகரிக்கவே செய்தது. ஆனால் ‘மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா’ எனும் அறியப்பட்ட பொறியியல் விஞ்ஞானியின் கருத்தினால், கர்நாடகம் குடகை ஏற்றுக்கொண்டது. கர்நாடகம் ஒரு அறிவியல் அறிஞரின் குரலுக்கு செவி சாய்த்ததிலும், தமிழகம் சமூகவியல் அறிஞரான பெரியாரின் குரலை அலட்சியம் செய்ததிலும் இருக்கிறது காவிரி மீது பறிபோன நமது உரிமை.

கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தின் தலைக்காவிரிப் பகுதியில்தான் பொன்னி நதியெனும் காவிரி பிறப்பெடுக்கிறது. அதனால் காவிரி மீது கர்நாடகம் பெரும்பான்மை உரிமையைக் கேட்கிறது. மேலும் தங்களுக்கே நீர் இல்லாதபோது, நாங்கள் எப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பது என்கிற நியாயப் பூர்வமான வாதத்தையும் கர்நாடகம் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டுள்ளது. தமிழகம், காவிரி நீரை முறையாகத் தேக்கி வைக்காமல் வீணாகக் கடலில் கலக்க வைத்துவிடுகிறது என்கிற குற்றச்சாட்டையும் கர்நாடகா தவறாமல் சுட்டிக் காட்டுகிறது.

ஒவ்வொரு முறையும் காவிரி டெல்லிப் பயணமாகி உச்ச நீதிமன்றத்தை அடையும்போதெல்லாம், கர்நாடகா இவைகளைத்தான் தன் பக்க நியாயங்களாக எடுத்துரைக்கின்றது. இதனோடு 1924ஆம் ஆண்டைய ஒப்பந்தம் இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்டது என்பதாலும், அது 1974ஆம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டது என்கிற காரணத்தாலும், காவிரி மீது தமிழகம் கோரும் உரிமைகள் முறையானதல்ல என்பதையும் சேர்த்தே சொல்லி வருகின்றன, கர்நாடக அரசுகள். ஆனால் தமிழகம் காவிரிக்காக கர்நாடகத்திடம் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் சண்டையென்பது உண்மையில் சண்டையல்ல, அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியிருக்கும் உரிமையின் வாதம்.

1892ஆம் ஆண்டு முதன் முதலில் காவிரி நதி தனது பிரச்சினையின் முகப்பைச் சந்தித்தது. திப்பு சுல்தானின் ஆட்சி வரை காவிரியின் வரலாற்றில் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே எவ்வித முரண்களும் உண்டாகவில்லை. ஆனால் அதற்கடுத்த அரசுகளின் குறுகிய மனோபாவத்தால் காவிரி நதி மெல்ல, மெல்ல பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்கி, 1892ஆம் ஆண்டு இரு அரசுகளும் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிலையை அடைந்தது.

அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு புதிய அணைகளைக் கட்டுதல், பாசனப் பகுதிகளை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை, சென்னை மாகாணத்தின் அனுமதியில்லாமல் செய்யக்கூடாது என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் மைசூர் அரசோ அதனை மிகக் குறுகிய காலத்திலேயே அவமதிப்புச் செய்து, ‘கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவோம்’ என காவிரிப் பிரச்சினையின் வேரை உருவாக்கியது.

பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் அப்போது இந்தியா இருந்ததினால், மைசூர் மற்றும் சென்னை ராஜ்ஜியங்களுக்கு இடையேயான இந்த அணைப் பிரச்சினையானது இங்கிலாந்து வரை சென்றுவிட்டது. இதனைப் பிரிட்டிஷ் அரசு கையிலெடுத்ததின் விளைவாகத்தான், ’1924ஆம் ஆண்டு ஒப்பந்தம்’ உருவானது. காவிரி விவகாரத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக இன்றளவும் இந்த ஒப்பந்தம் பேசப்பட்டுக் கொண்டுள்ளது.
கூடன்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் பாதிப்பு குறித்தும், அதனைச் செயலிழக்க வைக்க வேண்டும் எனவும் மிகப்பெரும் மக்கள் போராட்டம் இன்றளவும் நடந்துகொண்டுள்ள சூழலில்தான், பிரிக்ஸ் மாநாட்டில் மத்திய அரசு மேலும் இரண்டு அணு உலைகளை கூடன்குளத்தில் உருவாக்க ஆணை கொடுத்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியான இடமே இல்லை எனக்கூறி எய்ம்ஸ் மருத்துவமனையை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்கிறது.காவிரியை மறுக்கும் அரசு, எய்ம்ஸ் மருத்துவமனையை வேறுபக்கம் கொண்டு செல்லும் அரசு, அணுமின் நிலையத்தையும், மீத்தேனையும் மட்டும் நம்மீது சுமத்துகிறது. ஆனால் நாம் கட்சிக்கொரு நீதி பேசி பிரிந்து நிற்கிறோம்.

உண்மையில் காவிரியின் மீதான முழு உரிமை நமக்குத்தான் உள்ளது.

சற்றே பொறுமையாக சிந்தியுங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தும் நாம் காவேரி மற்றும் தாமிரபரணி வைகை பாலாறு தென்பன்னை இப்படி தமிழ்நாட்டில் ஓடுகின்ற ஒவ்வொரு ஆறுகளை பற்றியும் நமது வருங்கால குழந்தைகளுக்கு சொல்லிகொடுங்கள். அவர்களாவது நீர் மேலாண்மை பற்றி அறியட்டும். வளரட்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சோழம்வாழியவே சோழம்வாழியவே
பொன்னிவளநாடே எங்கள் தமிழ் கூறும் நல்லுலகமே வாழிய வாழியவே

நன்றி .🙏

முனைவர்
அர.க.விக்ரம கர்ண பழுவேட்டரையர் 🙏✍