#Cholan# #cholargal# #pazhuvettarayar# #pazhuvettaraiyar# #rajendracholar# #rajendracholan# #இராசேந்திரசோழன்# #பழுவேட்டரையர்# #பழுவேட்டரையர்கள்# #கங்கைகொண்டசோழபுரம்# #இராசேந்திரசோழர்# #சோழர்கள்#

கங்கை கொண்டான்
தரணிவென்றான்
பள்ளிகொண்டான்
பரணி ஆண்டான் ஆம்
ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ வீர இராசேந்திரன் வாழியவே
வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல்

சோழர் குலம் வாழ்க வாழ்க
சோழர் குலம் நீடூழி வாழியவே சோழர் குலம் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு செழித்தோங்கி வாழியவே அங்கனமே பழுவேட்டரையர் குலம் வாழிய வாழியவே……
சோழர்களின் வரலாறு
ஆம் சரித்திரத்தில் வரலாறு சாகா வரலாறு
மற்றவர்கள் அறிந்து கொள்ள இது சாபம் பெற்ற வரலாறு தொட்டால் துலங்கும் என்பார்கள் தகாதவர்கள் தொட்டால் சோழர்களின் வரலாறு தொட்டு அடிக்கும் என்பது சத்தியமே …
கண்டியர் கோன் இராசேந்திரன்
ருத்ரம் மல்லன் இராசேந்திரன்
பெரும் மல்லன் இராசேந்திரன்
இரண்டாம் ஆதித்த கரிகாலச் சோழன் ஸ்ரீஸ்ரீ வீரராஜேந்திர சோழ தேவர் அவர்களுக்கு யாண்டு …
அவர்தம் குறிப்புகளை எழுத அவர்தம் அனுமதியோடு இங்கே பதிகிறேன் அது பொன்னான காலம் சோழர் குலம் கட்டிக்காக்க பட்ட காலம் பெருந்திரளான மக்கள் ஓடும் பல்லாயிரக்கணக்கான படைகளுடன் கிழக்காசியா முழுவதும் ஆண்ட மன்னாதி மன்னன் வீரராஜேந்திர சோழன் அவர்கள் மட்டுமே அவரைப்பற்றிய வெளி குறியீடு ஆராய்ச்சி இது
இராஜராஜ சோழரின் இணை
அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர். அப்பனுக்கு நிகரான மகன்
தன் பேராற்றலை போரிலும் மட்டும்மல்லாது கட்டிடக்கலையிலும் காட்டினான்.
தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும், ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில தகவல்கள் உள்ளன.
ஆரியங்காவல் அழகு எங்கனம் சண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுவரம். விளைவுகளில் காணப்படும் இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம், விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ்சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் இந்திய அரசன் ஒருவன், இந்தியாவிற்கு வெளியே பெரும்படையுடன் படையெடுத்தான் என்றால் அது இராஜேந்திரன் தான். இராஜேந்திரனுடைய காலம் தான் விஜயாலய சோழன் உருவாக்கிய சோழப்பேரரசின் பொற்காலம். இராஜேந்திரனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் யாரும் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை. ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை(தற்போதைய ஜெயங்கொண்டம் பகுதி) தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். இதனுடன் ஒப்பிட்டால் விஜயாலன் தொடங்கி இராஜராஜ சோழன் வரையான மன்னர்கள் 150 ஆண்டுகள் தான் தஞ்சையில் ஆட்சி செய்திருக்கிறார்கள் இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. மற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமனத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.
விமானத்தின் உயரம் 160 அடி. எனவே, இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.
தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்ச மாவட்டம், கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், அவன் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குறிப்பிடப்படுகிறது.
ஆராய்ச்சிகள் மென்மேலும் தொடரும் சோழர்களின் ஒவ்வொரு அணுகுமுறையும் கலையும் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆனால் இன்றோ நடப்பது வேறு லிபிய சோழர் குலம் கட்டிக்காத்த பட்டர்களும் இவை இரண்டும் கண்முன்பே கட்டிடக்கலை தொல்லியல் துறை என்னும் அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது அரசியல் பின்புலங்கள் ஆளும் தேவையற்ற விளம்பரங்களுக்காகவும் புதியதொரு தலைமுறை அன்பு ஓடிக்கொண்டிருக்கிறது மீண்டும் மீண்டும் கூறுகிறேன் சோழர்களின் வரலாறு
பாதிக்கப்பட்ட ஆசிர்வதிக்கபட்ட சாபமான வரலாறு கட்டி எனவே அதை அங்கனம் அப்படியே விடாமல் கட்டி அணைக்கவும் அல்லது வீர வசனங்கள் கூறவோ உலகிற்கு விளம்பரம் செய்யவோ முயற்சிக்க வேண்டாம்.
சத்தியம் என்று நம்புவோம் . ஆகவே எனவே எனது கட்டுரையை இதையே சார்ந்து முடிக்கிறேன. வீர ராஜ சோழ தேவர் வாழ்க வாழ்க வீரராஜேந்திர சோழ தேவர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வீர பராக்கிரமம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க விண்மீன் அதிர நடந்து வந்த வீர கோமகன் வாழ்க வாழ்க….

என்றும் பேரன்புடன் முனைவர் அர.க. #விக்கிரமகர்ணபழுவேட்டரையர்#