ரகசியம் ஆம் சோழ ரகசியம்🙏🙏🙏
திரு சிற்றம்பலம்

வானளாவ கோவில் செய்து அதில் உலக அதிசயம் செய்தார் எம் பாட்டனார்.. அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.

நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த  பூமியின் மைய புள்ளி இருப்பத. கண்டறிந்து தமிழன்

Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க… தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World’s Magnetic Equator ).

பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கே கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
திருமந்திரத்தில் ” திருமூலர்”

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.

“பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை தமிழன்  அன்றே கூறிவிட்டான். உலகிற்க்கு மைய புள்ளி முதல் மசான கொள்ளை வரை அறிய செய்தவன் தமிழன் , ஆனால் இன்றோ உலகம் அழிவை நோக்கி செல்ல காரணம் என்ன? வாழ கற்று கொடுத்தவன் தமிழன் வாழ்ந்து  பழகியவன் தமிழன் ஆகவே இப்படிப்பட்ட ரகசியங்கள் அடங்கிய தென்னிந்திய பகுதிகளை காக்க வேண்டிய கடமை மரபு நம்பிக்கை மக்களுக்கு செய்ய சிற்றம்பல பெருமானை  வேண்டி விடை பெறுகிறேன்….

என்றும்
வரலாற்று பயணத்தில்
முனைவர் விக்கிரம கர்ண பழுவேட்டரையர்

 

#சோழர்கள்# #சோழர்களைதேடல்# #ஆய்வுகள்# #சோழமரபுகள்#
#சோழர்கள்நேரடிவாரிசுகள்

சோழர்கள் ஆம் இவர்களை அறிந்தகொண்ட விதம் அறிமுகபடுத்தபட்ட விதங்கள் வெவ்வேறு வழிகளாக இருந்தாலும் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கபட்டு இன்றும் நாம் நடைமுறையில் கடை பிடித்து கொண்டிருக்கும் கால அட்டவணை கி.மு. மற்றும் கி. பி ஆனால் இந்த அட்டவணைகள் எட்டாத சோழர்களின் வரிசை முறை இதோ….
சுமாலி மகள் வழி வந்த இராவணன் அவன் தம்பி சேனை முதலியோன்
அவன் தம்பி இளையவன்(பரமன்)
தங்கை(எவ்வளவு அழகான பெயர்) உமையம்மை (சூர்பனகை)
இராவணன் மகன் மேகநாதன் (இந்திரஜித்) இவன் மகன் வித்தகன் எனும் திருகோனன் இவன் மகன் தான்
சோழ,பாண்டிய,சேரர்களின் மூதாதையர்கள் ஆன #எல்லாளன்#

இவர்கள் கி.மு காலத்திற்கு முன்பானவர்கள் …
(இவ்வரசர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டிருந்தாலும் மிகுதியான வரலாற்று செய்திகள் அறிவதற்கு ஏதும்இல்லை)
01. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
02. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி
03. வேல்பல் தடகைப் பெருநற்கிள்ளி
04. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி
05. தித்தன்
06. சோழன் நல் உருத்திரன்
07. முல்லைக்கலி சோழன்
08. நல்லுத்தரன்
09. குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
10. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
11. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
12. வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி
13. அத்திரிசோழன்
14. அரியசந்திரசோழன்
15. அண்டசோழன்
16. அடைவளைசோழன்
17. அன்னசோழன்
18. அன்பசோழன்
19. ஆந்தைசோழன்
20. ஆதனழிசிசோழன்
21. ஆலங்கிள்ளிசோழன் (ஆலசோழன்)
22. ஆதிராசேந்திரசோழன்
23. ஆனைச்சேவகசோழன்
24. அபயகுலசேகரசோழன்
25. கலிக்காமசோழன்
26. கடம்பசோழன்
27. கடையசோழன்
28. கண்டர்கிள்ளிசோழன்
29. காங்கமசோழன்(காந்தமசோழன்)
30. கிள்ளிசோழன்
31. கொள்ளிசோழன்
32. குடசோழன்
33. குருசோழன்
34. குமாரமகீதரசோழன்
35. கூரசோழன்
36. கொள்ளிசோழன்
37. கோப்பெருஞ்சோழன்
38. பஞ்சநதசோழன்
39. பாண்டுசோழன்
40. பாலையசோழன்
41. பாதிரிசோழன்
42. பாம்பசோழன்
43. புத்திகழிசோழன்
44. பசுபோகசோழன்
45. புகழ்ச்சோழன்
46. புலவசோழன்
47. பூதசோழன்
48. பெருந்திருமாவளவசோழன்
49. பெரும்பற்றசோழன்
50. பைஞ்ஞீலசோழன்
51. பொன்னசோழன்
52. பெரியசோழன்
53. பேரெயில்சோழன் (பேர்சோழன்)
54. மண்ணிசோழன்
55. மயில்சோழன் (மயிலாடுசோழன்)
56. மறவசோழன்
57. மஞ்சசோழன்
58. மதுராந்தகசோழன் (சோழவல்லபன்)
59. மாந்தைசோழன்
60. முள்ளிசோழன்
61. வடமசோழன்
62. வாஞ்சிசோழன்
63. வாலிசோழன்
64. வீரவாதித்தசோழன்
65. வெட்டுவசோழன்
66. வெண்டசோழன்
67. வெண்ணிசோழன்
68. சந்திரசோழன்
69. சங்கரசோழன்
70. சாளுவசோழன்
71. சித்தசோழன்
72. சிரசோழன்
73. சுந்தரசோழன்
74. செங்கமலசோழன்
75. சென்னிசோழன்
76. சேந்தசோழன்
77. நல்லுருத்திரசோழன்

78. நீவசோழன்
79. ஓடம்போகிசோழன்
80. ஐவசோழன்
81. உலகநாதசோழன்
82. ஈச்சோழன்
83. தக்கோலசோழன்
84. திருமலைசோழன்
85.இளஞ்சேட்சென்னி
86.கரிகால் முதலாமவர்
87.திருமாவளவன் என்கிற கரிகாலன் (இமயம் வென்றவர் கல்லனை கட்டியவர்)
88.நெடுங்கிள்ளி 89.நலங்கிள்ளி
90கிள்ளிவளவன்
91.கோப்பெருஞ்சோழன்
92.கோச்செங்கண்ணன்
93பெருநற்கிள்ளி இவர்க்கு பிறகு வரலாற்றில் பதிவுகள் சில நூற்றாண்டுகளாக இல்லை சரியாக 360 (களபிரார்கள் என இன்றைய சமுக ஆர்வலர்களால் பெயரிடபட்டு அழைக்கப்படும் அந்த இனகுழு)கழித்து கி.பி 850 விசயாலயன் பழையரை யில் மீண்டும் ஒரு சோழ பேரரசை நிறுவினார், அதன் பிறகு ஆக முன்னூற்றி அறுபது வருடங்களுக்கு முன்பு சிறு-குறு அரசர்களாக இருந்த சோழ சாம்ராஜ்யம் மீண்டும் பெறுவதற்கு காரணமாயிருந்த பிற்காலச் சோழர்களின் பெயர்கள்,
சிபிச் சோழன்
அவரது மகன்கள்
94.நந்தி மறவன்
95.குமரன்ங்குசசோழன்
குமரன்ங்குசசோழன்
96.விசயாலய சோழன்
97.முதலாம் ஆதித்தன்
98.பராந்தகச் சோழன்,
99. கண்ணார தேவன்
100 . இராஜாதித்தன்
101 கண்டாரத்தியன்
102.உத்தமசீலி
103.அரிஞ்சய சோழன்
இரண்டாம் பராந்தக சோழன் என்கிற அழகு வடிவு
104.சுந்தரசோழன்
105. ஆதித்ய கரிகாலன்
106.உத்தமச் சோழன்
107.அருள்மொழி வர்மன் என்கிற பெரு உடைய மும்முடிச் சோழ சக்கரவர்த்திகள்
ஸ்ரீ ராஜராஜ சோழர்.
108.முதலாம் ராஜேந்திர சோழர்
109 ராஜாதிராஜ சோழன்
110.ராஜாதி ராஜ சோழனின் தம்பி இரண்டாம் ராஜேந்திர சோழன்
111. வீரராஜேந்திர சோழன்
ஆக முதலாம் ராஜேந்திர சோழனின் மூன்று மகன்களும் முறையே ராஜாதிராஜ சோழன் இரண்டாம் ராஜேந்திர சோழன் வீர ராஜேந்திர சோழன் அனைவரும் வேலை சாளுக்கிய போர்களில் ஒன்றின் பின் ஒன்றாக பெரும்புகழ் எய்தி விட்டபிறகு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தன் சோழர் மகளைக் மணமுடித்த தன் மூலமாக மூலமாக அவரது கொள்ளுப் பேரனான முதலாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏறினார் ஆக தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது வீர ராஜேந்திர சோழன் சோழ பரம்பரையின் நேரடி வாரிசு முடிகிறது.
இதனை பிறகு பல்வேறு கல்வெட்டுகள் மற்றும் செப்பு பட்டயங்கள் மூலமாக அறியலாம்.

ஆய்வுகள் தொடரும்…..

என்றும் பேரன்புடன் முனைவர் .அர.க #விக்ரமகர்ணபழுவேட்டரையர்#