#Savecanals# #pazhuvettarayar#
#9# சோறுடைத்த பூமியது பரிதாபம் பரிதாபம்
மாற்றானுக்கு மண்டியிடாத வீரம் எங்கே
ஏரிகள்
குளங்கள்
கண்மாய்கள்
ஆறுகள்
காணாமல் போவது ஏன்.

இதோ எங்கள் சீராபுரம் ( திரு சீராபுரம்)
நம்ம திருச்சியின் உய்யங்கொண்டான் கால்வாய் பற்றிய எனது கட்டுரை

#Uyyangondancanal# #உய்யங்கொண்டான்#

சோழநாட்டு (தென்கரை)த்தலம்.

தற்போது ‘உய்யக்கொண்டான்’ மலை என்று வழங்குகிறது. திருச்சிக்குப்
பக்கத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இதற்கு
‘உய்யக் கொண்டீஸ்வரம்’ என்று பெயர்.

இறைவன் கல்லில்-மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர்
பெற்றது. நந்திவர்ம பல்லவ மன்னனால் அமைக்கப் பெற்ற கோயில்.
இப்பகுதிக்கு ‘நந்திவர்ம மங்கலம்’ என்னும் பெயருண்டு. ஆம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட கோயிலாகும் இது.

பண்டைத்தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விசயாலய சோழன் ஆவான். விசயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார். பின்பு பல்லவபேரரசை எதிர்த்து போரிட்டு சோழர்களின் உரிமையை நிலைநாட்டி உய்யங்கொண்டான் ஆம் தம்மை தாமே உயரத்தில் வைத்து கொண்டார் எனும் பெயரும் பெற்றார். ஆனால் இதுவே சோழர்களின் சக்கவர்த்தி எனபோற்றபடும் அருள்மொழிவர்ம தேவராகிய இராசாராசர்க்கும் உய்யங்கொண்டான் பெருமை பெயரும் உண்டு ஆனால் அவர்தம் முப்பாட்டன் கொண்ட அன்பினால் இராசாராசர்க்கும்( 101 பட்டம் பெயர்கள்)உய்யங்கொண்டான் எனும் பட்ட பெயர் ஒன்றாயிற்று.இன்றைய மாயனுர் பகுதியை மடைஅடைத்துதேக்கி இன்றைய பெட்டவாய்த்தைலவழியாக பல ஆயிரம் ஏக்கர்கள் பலன் பெறும் இந்த உய்யங்கொண்டான் தேவாதிதேவர் சோழர்க்கு அரசர் ஐயன் ஸ்ரீஸ்ரீ விசயாலய சோழரால் வெட்டப்பட்டு அவர்தம் பேரன் சிவபாதசேகரனார் ஸ்ரீஸ்ரீ இராச இராச சோழர் செப்பனிடப்பட்டது இந்த உய்யங்கொண்டான் ஆறு இன்றைய திருச்சி மாவட்டத்தின் காமநாயக்கன் பாளையம், சிறுகமணி, பெருகமணி, பழையூர், ஆணைமலை, திருப்பராய்த்துறை, எலமனூர், கொடியாலம், புலிவலம், குழுமணி, பேரூர், மேக்குடி, கோப்பு, எட்டரை, முள்ளிக்கரும்பூர், வயலூர், அதவத்தூர், சோமரசம்பேட்டை, நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், பொம்மணிசமுத்திரம், இனியானூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், ராமநாதநல்லூர், ஆளவந்தான்நல்லூர், மருதாண்டாக்குறிச்சி, பாண்டமங்கலம், அரவானூர், வரகனேரி, அரியமங்கலம், காட்டூர், பாப்பாக்குறிச்சி, கீழமுல்லைகுடி, மேலமுல்லைகுடி, ஒட்டக்குடி, கல்கண்டார்கோட்டை, திருவெறும்பூர் மலைக்கோயில், வேங்கூர் பகுதிகள். திருவெறும்பூர் வட்டத்தில் நவல்பட்டு, சோழமாதேவி, அரசங்குடி, கூத்தப்பார், குமரேசபுரம், கிருஷ்ணசமுத்திரம்,
மல்லியம்பத்து பகுதி வழியாக சென்று 30 மேற்பட்ட ஏரிகளை நிறப்புகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கிளை வாய்களை அழகிய திருவிழாக்களையும் தன்னகத்தே கொண்ட இந்த உயிர்நதியின் நிலைமை பரிதாபமாக உள்ளது .
ஒரு முறை ஒரே முறை நேரில் சென்று பாருங்கள் இன்றைய குழமாயி அம்மன் கோவில் உள்ள பகுதியைய நெஞ்சம் பதருகிறது.

ஆனால் இன்றோ அதன் கதி திருச்சி மக்கள் அறிவீர்கள்….. நம்மை ஆட்சி செய்த மன்னர்களால் நமக்காக செதுக்கபட்ட உய்யங்கொண்டான் போல பல பெரும்வாய்கால்கள் ஏரி குளங்களை மூடி மக்களாட்சி தத்துவத்தை பின்பற்றுகிறோம் என்ற முறையில் இயற்கையை சீரழிப்பது எப்படி முறையாகும்….

என்றும்
பேரன்புடன்

முனைவர் அர .க .விக்கிரம கர்ண பழுவேட்டரையர்