#தீவுகளின்கூட்டணி# #சோழத்தீவுகள்# #தமிழர்தீவுகள்# #பன்னிராயிரம்தீவுகள்# #பழுவேட்டரையர்தீவுகள்#

#ஆதிதமிழன்# தனக்காக வைத்து கொண்ட பகுதிகள்
பன்னீர் ஆயிரம் தீவுகள், எம் பழம்பெரும் மக்கள் வாழ்ந்த மண் இன்றோ சிதறி கிடக்கிறது. இந்திய எல்லையின் கணக்கின்படி
இப்பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மொத்தம் 572 தீவுகள் உள்ளபோதும், அவற்றில் 36 தீவுகளில் தான் மக்கள் வசித்து வருகிறார்கள் நவீன உலகம் இவர்களுக்கு சூட்டியிருக்கும் பெயர் ஆதிவாசிகள். ஆம் ஆதித்தமிழன் ஆதிவாசிகள் என்று அழைக்கப்படலாம், தெரிந்தோ தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் மறந்து போனோம் அவர்களை, நாம் அறியோம் அவர்கள் அதையே விரும்பினர் என்பதை. நவீனமயமாக்கல், அறிவியல் ஆக்கம் என உலகம் ஆச்சாரம் இல்லா கலாச்சாரத்தை தேடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. நிலம் சார்ந்த உணர்வு சார்ந்த உரிமை சார்ந்த செயல்களை மறந்து மனிதன் எங்கோ ஓடி கொண்டிருக்கின்றான். தயவுகூர்ந்து எங்களை மறந்து விடுங்கள், நாங்கள் தனித்தே வாழ்ந்து கொள்கிறோம் என்று உலகத் தொடர்பிலிருந்து ஒதுக்கிக்கொண்டு நிர்வாணமாய் இயற்கையோடு ஒன்றி காற்று மாசுபாடு இன்றி தங்கள் இன குழுவையும் பாதுகாத்துக் கொண்டு, வாழ்ந்து வரும் பூர்வீக தமிழ்குடி மரபினரை ஆதித்தமிழர் என்றும் கூறலாம். ( அல்லது இந்த இந்திய துணைக்கண்டம் வினைச்சொல்லாக என்றும் கூறலாம் ) ? . இந்திய பெருங்கடலில் உள்ள இந்த தீவுகள் பழைய பர்மாவுக்கும் இந்தோனேசிய கடல் பகுதிகளுக்கும் மலேய கடல் பகுதிகளுக்கும் சார்ந்ததாக அமைந்திருக்கும் தீவில் ஏனோ தெரியவில்லை இந்த ஆதிக்குடிமக்கள் தங்களை தனித்தே வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எதனால்? எப்படி ? எங்கனம்? இப்படி ஒரு இனக்குழு வாழக்கூடும், உலக தொடர்புக்கு அப்பாற்பட்டு. உணவு உடை இடம் காற்று வாழ்வியல் முறை இப்படி அத்தனையும் தொலைத்து கொண்டிருக்கும் நவீன மனிதன் திடீரென்று ஆதிகுடிகளின் வாழ்வியல் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும் ? காரணம் எளிது…. மாசுபடாமல் அதிகம் வயது எங்கனம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று தமிழர்களின் இலக்கணமும், இலக்கியமும், வாழ்வியல் முறைகளும்,துறந்து மறந்துபோன காரணத்தினாலே தமிழர்கள், உலக தொடர்பற்று வாழ்ந்து கொண்டிருக்கும் தொல்குடிகளை சீண்டுகிறான்.
வேண்டாம், காத்திருக்கிறது வரலாறு, ஏன் சோழர்கள் வெற்றி கொண்ட அந்த தீவுகளில் கற்றளிகள் கட்டப்படவில்லை? ஏன் தாங்கள் சென்று வந்ததற்கான சான்றுகள் விடப்படவில்லை ? இன்றைய நவீன வரலாற்று ஆய்வாளர்களின் தலைசுற்றும் கேள்வி இது. இதற்கு ஆதாரம் ? புலிக்கொடி பொறித்த கல்வெட்டு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதோடு கார் நிக்கோபார், பெரிய நிக்கோபார் (கிரேட் நிக்கோபார்) ஆகிய தீவுகளை சோழர்கள்,’கார்த்தீபம், நாகதீபம்’ என்று அழைத்திருக்கின்றனர். மேலும் சோழர்களின் வணிகக்கப்பல்களும், போர்க்கப்பல்களும் அந்தமான் நிக்கோபார்த்தீவுகளுக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கின்றன. தஞ்சைக்கல்வெட்டுகளிலும், மலேய நாட்டு கல்வெட்டுகளிலும் ‘நக்காவரம்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது நக்காவரம் என்பது நக்கம் எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகவும், நக்கம் என்றால் ‘அம்மணம்’ என்றும் பொருள். இங்கு முன்பு வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் அம்மணமாக (நிர்வாணமாக) வாழ்ந்து வந்ததால் இந்தத் தீவுக்கூட்டம் நக்காவரம் என்ற பெயர் பெற்றிருக்கிறது. உலக நவீனமயமாக்கல் கருவிகள் எவ்வளவு ஆராய்ச்சிகள் இருந்தும் ஏன் யாராலும் அவர்களை நெருங்க முடியவில்லை காரணம் கேட்கிறது உலகம் பதில் சொல்ல மறுக்கிறது ஆதிகுடி தமிழ் மக்கள். எங்கனம் அவர்களை அவர்கள் பாதுகாத்துக் கொள்கிறார்கள் ? மிகப்பெரிய கேள்வி இது. இன்றைய உலகில் ஒரு செயலை மறக்க கொடுஞ்செயல் செய்யப்படுகிறது ஆகவே நடந்து முடிந்த செயல்களை மறந்து செய்திகளைத் தேடி மனிதன் ஓடிக்கொண்டிருக்கிறான் ஆக மறந்தது நன்றே! இதற்கு நடுவில் அவனுக்கான தேடல்களும் நடந்து கொண்டிருக்கின்றன வரலாறு என்பது யாரோ ஒரு சில மக்களுக்கானது அல்ல பெரும் மன்னர்களின் கீழ் வாழ்ந்த ஒரு மிகப் பெரும் சமூகக் கூட்டத்திற்கானது என்பதை என்று தமிழன் உணர்கிறானோ அன்று அவன் வாழ்வு வளம் பெறும். நிகழ்காலத்தில் நாம் ஆதி குடிமக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என அறிந்து கொண்ட பிறகும் உலகியல் வாழ்க்கைக்காக ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம். நன்றி
என்றும்
பேரன்புடன்
முனைவர் அர. க.
#விக்ரமகர்ணபழுவேட்டரையர்